முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களில் மாற்றுத்திறனாளி திருமணம் நடந்தால் மணமக்களுக்கு புத்தாடைகள் தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
TN-Wed-2022-06-16

Source: provided

சென்னை ; கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடந்தால் அந்த மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், கட்டணம் ஏதுமின்றி திருமணம் நடத்தப்படுகிறது. கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இப்போது இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. 

 

இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை கோவில் வரவு, செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யும் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்கவும் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து