முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து  தமிழக அரசு பள்ளிகளிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று அரை நாள்கள் பணி செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் மூன்று அரை நாட்களில் ஒரு அரை நாட்கள் பணியாற்றாவிட்டாலும் அந்த மாதத்திற்குரிய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் வெறும் 14 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருப்பதால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் இந்த மாதத்திற்கு வழங்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி செயல்பாடுகளில் இந்த பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து