முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
RN-Ravi 2022 01 04

Source: provided

தூத்துக்குடி : அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ஆர்.என.ரவி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் பெயரில் விருதுகளை வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர், 'அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் தான் அக்னிபாத். அக்னிபாத் திட்டத்தில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்கப்படுகிறது. 

சிறப்பான திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைக்கின்றனர்.  21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும். திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்,'என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து