முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் புதிய விடியோவால் பரபரப்பு..!

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      அரசியல்
eknath-shind-2022-06-23

அசாம் மாநிலத்தில் தன் ஆதரவாளர்களான 42 எம்.எல்.ஏக்களுடன் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே புதிய காணொலியை வெளியிட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனா சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முதலில் அமைச்சருடன் 10 எம்.எல்.ஏ.க்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது,  ‘40 எம்.எல்.ஏ.க்கள் இங்கு இருக்கிறார்கள். நாங்கள் பாலசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவாவின்படி நடக்கிறோம்' என்றும் தெரிவித்திருந்தார்.

குஜராத்திலிருந்து கிளம்பிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 35 பேர் சிவசேனா கட்சியினர், 7 பேர் சுயட்சை எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக இருக்கும் காணொலியை ஏக்நாத் ஷிண்டே தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!