முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்: மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
trafic-jam-2022-06-23

Source: provided

சென்னை : அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிக்கு சென்றோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்தனர். 

இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி உள்ளாகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!