முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 196.62 கோடியாம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
corono-ins2022-06-23

Source: provided

புதுடெல்லி ; நாட்டில் இதுவரை 196.62 கோடி கொரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை நேற்ரு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 1,96,62,11,973 (196.62 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது.

இதுவரை, சுமார் 3,60,03,591-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 2,17,89,092 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன. 

18-44 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 55,79,89,542 ஆகவும், இரண்டாவது டோஸ் 49,89,67,321 பேருக்கும், முன்னெச்சரிக்கையாக 22,24,238 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!