முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

117-வது பிறந்த நாள்: சென்னையில் ம.பொ.சி. சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று 26.06.2022 காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சென்னையில் பொன்னுசாமி கிராமணியார் – சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 26.06.1906-ல் மகனாகப் பிறந்தார்.  சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் ம.பொ.சி. சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார்.  தான் பெற்ற அனுபவத்தாலும், சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும், சிறந்த தலைவராகவும், தமிழறிஞராகவும் விளங்கினார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில், சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் சிலம்புச் செல்வர் என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பிறந்த நாள் விழா ஜூன் மாதம் 26-ம் நாள் அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ம.பொ.சி.யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து