முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு டி-20 தொடர் அறிவிப்பு: முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2022      விளையாட்டு
Pakistan-team 2022-06-28

Source: provided

லாகூர் : நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் இடையேயான முத்தரப்பு டி-20 தொடரில் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

முத்தரப்பு தொடர்...

டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது. டி20 முத்தரப்பு தொடர் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. 3-வது அணியாக வங்களாதேசம் விளையாடுகிறது. டி20 தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி அக்டோபர் 7 மற்றும் 10-ம் தேதிகளில் எட்டாவது இடத்தில் இருக்கும் வங்கதேசம் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிகளுடன் விளையாடுகிறது.

முதல் போட்டியில்... 

இந்த டி20 முத்தரப்பு தொடர் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் மோதுகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி பாகிஸ்தான் நியூசிலாந்தையும், அக்டோபர் 13 ஆம் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

முத்தரப்பு டி-20 அட்டவணை: 

1) 7 Oct – பாகிஸ்தான் வங்காளதேசம்.

2) 8 Oct – பாகிஸ்தான் v நியூசிலாந்து.

3) 9 Oct – வங்காளதேசம் v நியூசிலாந்து.

4) 11 Oct – நியூசிலாந்து v பாகிஸ்தான்.

5) 12 Oct – வங்காளதேசம் v நியூசிலாந்து.

6) 13 Oct – வங்காளதேசம் v பாகிஸ்தான்.

7) 14 Oct – இறுதி ஆட்டம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து