முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெராக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. திடீர் மரணம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      உலகம்
John-Vincent 2022 06 30

ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது 59-வது வயதில் உயிரிழந்தார். 

ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் எடுப்பதை இந்தியாவில் ஜெராக்ஸ் எடுப்பது என பெரும்பாலான மக்களால் கூறப்படுகிறது. ஆனால், ஜெராக்ஸ் என்பதும் ஒளிநகர் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். 

இதனிடையே, ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (சி.இ.ஓ) ஜான் விசென்டின் (வயது 59) செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஜெராக்ஸ் நிறுவன சி.இ.ஓ. ஜான் விசென்டின் நேற்று முன்தினம் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விசென்டின் உயிரிழந்ததாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இடைக்கால சி.இ.ஓ.-வாக ஸ்வீவ் பிராண்ட்ரோஸ்வ் நியமிக்கப்படுவதாக ஜெராக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து