முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கையா நாயுடு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
CM-1 2022 07 01

Source: provided

சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி முதல்வர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நம் நாட்டுக்காக தாங்கள் தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன்.

நேர்மையும், ஆழ்ந்த அறிவும், எத்தகைய சூழலிலும் சிறிது நகைச்சுவை நயமும் நிறைந்த தங்களது புகழ்மிக்க வாழ்க்கையானது பொதுவாழ்வில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!