முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையில் கேஷூவலாக ரசிகர்களை சந்தித்த அஜித்!

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      சினிமா
thumb

Source: provided

நடிகர் அஜித் நடிகராக மட்டுமின்றி மிகச் சிறந்த பைக் ரைடராகவும் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் அவர் இந்தியா முழுவதும் பைக்கில் வலம் வந்து சாதாரணமாக சாலையில் அமர்ந்திரு்ந்த படங்கள் நெட்டில் வைரலாகின.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் அல்லது காரை எடுத்துக் கொண்டு ஒரு டிரிப் அடிப்பது அவர் வழக்கம். தற்போது தனது பிஎம்டபிள்யு காரை எடுத்துக் கொண்டு அஜித் ஐரோப்பிய சாலைகளில் வலம் வருகிறார்.

இது தொடர்பான அஜித்தின் படங்களை அவரது நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ராஜ் வெங்கட் டுவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து அவை வைரலாகி வருகின்றன. இதில் இங்கிலாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அஜித் சுற்றுபயணம் மேற்கொள்ளும் படங்களை பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி இங்கிலாந்தில் சாலையில் கேஷூவலாக ரசிகர்களை அஜித் சந்திக்கும் படங்களும், ஷாப்பிங் மால், ரெஸ்டாரெண்ட் ஆகிய இடங்களில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் தொடங்கி உள்ளது.

47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்lது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என்கின்ற படக்குழு வட்டாரங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து