முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 தொடரில் விளையாடுகிறார்: கொரோனாவிலிருந்து மீண்டார்; இந்திய கேப்டன் ரோகித் சர்மா..!

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      விளையாட்டு
Rohit-Sharma 2022 06 29

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

5வது டெஸ்ட்...

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி அட்டவணை திருத்தியமைக்கப்பட்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும் 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டத்தின் 2வது நாளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டார். 

குணமடைந்துள்ளார்... 

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.  இது குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ ரோகித் சர்மா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதன்மூலம், அவருடைய தனிமைப்படுத்துதல் காலம் முடிவுக்கு வருகிறது. இருப்பினும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் டி20 பயிற்சி ஆட்டத்தில் விளையாடமாட்டார்.” என தெரிவித்துள்ளார். 

அணிக்கு வலுசேர்க்கும்...

விதிமுறைகளின் படி, கொரோனாவில் இருந்து ஒருவர் குணமடந்த பிறகு அவர் கண்டிப்பாக இதயத்துடிப்பு சோதனை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனாவிற்கு பிறகு அவரது நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்பது பரிசோதிக்கப்படும்.  கொரோனாவிலிருந்து ரோகித் சர்மா குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!