LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை முதல்வர் தொடங்கி வைத்தார். 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழக அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்தினை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் துவக்கம்:
மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம். மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் (https://tntecxperience.com) முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest – தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. வழிகாட்டி நிறுவனமும், Startup TN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த நிகழ்வில், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
மேலும் நிதி தொழில் நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை முதல்வர் அந்நிறுவனங்களுக்கு வழங்கினார்.
மேலும் 65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
அதை தொடர்ந்து 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, தமிழக முதல்வர், உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-ஐ வெளியிட்டார். அதை தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-யையும் முதல்வர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, டாடா பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பிரவீன் சின்ஹா, ஆக்மே குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ்குமார் உபாத்யாய், இயக்குநர் சசி சேகர், கூபிக் பிவி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் பீட்டர் வான் மீர்லோ, அயல் நாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் / கூட்டமைப்புகளின் பிரதிநிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 2 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 4 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 1 day ago |
-
75-வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார் : விருதுகள், பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்
14 Aug 2022சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.
-
பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு
14 Aug 2022சென்னை, ஆக. 15- பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் : தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோருகிறார்
14 Aug 2022சென்னை : சென்னையில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு முதல்வர் மு.க.
-
75-வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து
14 Aug 2022சென்னை ; நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க.
-
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி
14 Aug 2022பிராண்ட்போர்ட் : 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் - மான்ச
-
சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்
14 Aug 2022சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
-
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை விரட்டியடித்த தலிபான்கள்
14 Aug 2022காபூல் ; காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன.
-
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?
14 Aug 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.
-
20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் - ரிக்கி பாண்டிங்
14 Aug 2022புதுடெல்லி : 20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
-
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Aug 2022மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-08-2022
14 Aug 2022 -
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி
14 Aug 2022ஒட்டாவா : ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Aug 2022சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்
14 Aug 2022வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
-
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
14 Aug 2022ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்
14 Aug 2022புதுடெல்லி : கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வரு
-
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்
14 Aug 2022டொரண்டோ : கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சென்னையில் காந்தியின் திருவுருவ சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
14 Aug 2022சென்னை : தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை இன்று காலை 10.30 மணியளவில்
-
சல்மான் ருஷ்டியை தொடர்ந்து ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கும் டுவிட்டரில் கொலை மிரட்டல்
14 Aug 2022லண்டன் ; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
14 Aug 2022புதுடெல்லி பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
-
பீகாரில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு? - காங்கிரசுக்கு 4 மந்திரிகள்
14 Aug 2022பாட்னா : பீகாரில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியேற்றுகிறார் : முப்படை தளபதிகள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு
14 Aug 2022புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
-
75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்: அமெரிக்காவில் தேசிய கொடியை ஏற்றும் இந்திய போர்க்கப்பல்
14 Aug 2022புதுடெல்லி : நாடு முழுவதும் இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
அமெரிக்காவில் விமானத்தை இயக்கி அசத்திய தாய், மகள் வலைதளங்களில் வீடியோ வைரல்
14 Aug 2022வாஷிங்டன் ; அமெரிக்காவில் பைலட்டுகளாக பணிபுரியும் தாய், மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.
-
புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு தொகுப்பு : ஒடிசா அரசு முடிவு
14 Aug 2022புவனேசுவரம் : ஒடிசாவில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.