முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: மனு தாக்கல் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      இந்தியா
Parliament 2022-07-05

Source: provided

புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று தொடங்கியது.மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந்தேதி நடைபெறும்.

வேட்புமனுவை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும். ஒரு எம்.பி. ஒரு வேட்புமனுவை மட்டுமே முன் மொழியவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டும். 

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். டெபாசிட் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையை சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆளும் பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து