முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் ராணுவ தள ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: 6 பேர் பலி

புதன்கிழமை, 6 ஜூலை 2022      உலகம்
Yemen 2022-07-06

Source: provided

சனா : ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

ஏமன் நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் அப்யன் மாகாணம் லவ்டர் நகரில் அரசுப் படைகளுக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் அரசு ஆதரவு படையினர் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், மேலும், இந்த வெடிவிபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!