முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி: 3 தமிழக வீராங்கனைகள் தேர்வு

புதன்கிழமை, 6 ஜூலை 2022      விளையாட்டு
3-players 2022-07-06

Source: provided

சென்னை : தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். 

3 வீராங்கனைகள்... 

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் (17வயதுக்குட்பட்டோர்) பிரிவுக்கான பந்தயம் ஆகஸ்ட் 9-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தவற்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடந்தது. தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். 

இந்தியா சார்பில்... 

ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின் (கன்னியாகுமரி) சபரே பிரிவிலும் பங்கேற்றார்கள். இந்த 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த 3 பேருக்கும் செல்வகுமார் பயிற்சி அளிக்கிறார். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தை நிர்வகிக்கும் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!