முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வருடத்தில் இந்திய அணியின் கேப்டனான 9 பேர்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      விளையாட்டு
Indian-team-captain 2022-07

Source: provided

மும்பை : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவன் கேப்டனாகவும் ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

ராகுல் டிராவிட்... 

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தொடரிலும் அவர் புதிய கேப்டனுடன் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வருடம் இந்திய அணியின் 8-வது கேப்டனாக உள்ளார் ஷிகர் தவன். 

புதிய கேப்டன்கள்...

கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. 

2022-ல் இந்திய அணியின் கேப்டன்கள்:

1) விராட் கோலி - தெ.ஆ. டெஸ்ட்.

2) கே.எல். ராகுல் - தெ.ஆ. ஒருநாள் தொடர்.

3) ரோஹித் சர்மா - இலங்கை, மே.இ. தீவுகள் தொடர்கள்.

4) ரிஷப் பந்த் - தெ.ஆ. டி20 தொடர்.

6) பாண்டியா - அயர்லாந்து டி20 தொடர்.

7) பும்ரா - இங்கிலாந்து டெஸ்ட்,

8) தினேஷ் கார்த்திக் - இரு டி20 பயிற்சி ஆட்டங்கள்.

9) ஷிகர் தவன் - மே.இ. ஒருநாள் தொடர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து