முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலத்திற்கு வரும் ஹிட்லரின் கைக்கடிகாரம்: ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்பு

திங்கட்கிழமை, 18 ஜூலை 2022      உலகம்
Hitler 2022 07-18

Source: provided

வாஷிங்டன் : ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள். ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.

கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அதை ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து