முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      உலகம்
America-van 2022-07-19

Source: provided

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் வேன் ஒன்று கவிழ்ந்த திகில் காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலை ஒன்றில் வரிசையாக கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சாலையில் திடீரென பெரிய அளவில் இயற்கையாக பள்ளம் ஒன்று உருவானது.

இதனால், அந்த பெரிய பள்ளத்திற்கு அருகில் நிறுத்தி இருந்த வேன் ஒன்று தள்ளாடியபடி அதில் கவிழ்ந்தது. அந்த வேனுக்கு முன்னால் கார் ஒன்று நின்றிருந்தது. அந்த காரின் பின்பக்க சக்கரங்கள் பள்ளத்திற்குள் விழுவது போன்று ஆட்டம் காட்டின.

எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து