முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு நெருக்கடியை தீர்க்க ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் : அதிபர் புடின் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 20 ஜூலை 2022      உலகம்
Putin 2022 02 26

Source: provided

டெக்ரான் : உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், சர்வதேச உணவு சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில் உணவு நெருக்கடியை தீர்க்க ரஷ்யா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போருக்கு பிறகு புடின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அவர் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு சென்றார். அங்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் புடின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ரஷ்ய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும். உலக சந்தைகளுக்கு ரஷ்ய உரங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர்.

அது போன்று சர்வதேச உணவு சந்தைகளில் நிலைமையை மேம்படுத்த அவர்கள் உண்மையாக விரும்பினால் ரஷ்ய தானியங்களின் ஏற்றுமதி மீதான தடையை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும். உலகில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிது அளவு கூட சாத்தியமற்றது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து