முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேஜாவு விமர்சனம்

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
Dejavu-review 2022 07 25

Source: provided

அருள்நிதி, மதுபாலா, அச்சுயுத் குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸ்மிருதி, காளி வெங்கட், மைம் கோபி, சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தேஜாவு. அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருப்பவர் மதுபாலா. இவருடைய மகள் ஸ்ருதி வெங்கடை சிலர் கடத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி விசாரிப்பதற்காக அருள்நிதி அண்டர்கவர் ஆபீஸராக வருகிறார். எழுத்தாளர் அச்யுத் குமார் எழுதி வரும் கதையில் என்ன இருக்கிறதோ அதுதான் தற்போது நடக்கிறது. இதை கண்டு அருள்நிதி மற்றும் மதுபாலா அதிர்ச்சி அடைகிறார்கள். அச்யுத் குமார், நடக்கும் உண்மைகளை எப்படி முன்கூட்டியே ஒரு கதையாக எழுதுகிறார்? கடத்தப்பட்ட ஸ்மிருதி என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை. நாயகன் அருள்நிதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இந்த படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அண்டர் கவர் ஆபீஸராக நடித்திருக்கும் அருள்நிதி தனது நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருக்கிறார். உயர் அதிகாரியாக வரும் மதுபாலா, நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அச்யுத் குமார் நடிப்பும் அவருக்கு மிக சரியாகப் பொருந்தும் எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரலும் சிறப்பு. காளிவெங்கட், ஸ்ம்ருதி வெங்கட், ராகவ் விஜய் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. கிளைமாக்ஸ் அசத்தல். இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. முத்தையாவின் ஒளிப்பதிவு அருமை. மொத்தத்தில் தேஜாவு என்ற வித்யாசமான த்திரில்லர் படத்தை கொடுத்த இயக்குனர் அர்விந்த் ஸ்ரீநிவாசனுக்கு நமது பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து