முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றைக்காலுடன் நடனம் ஆடிய பிரபுதேவா

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      சினிமா
Prabhu-Deva 2022 07 25

Source: provided

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் படம் பொய்க்கால் குதிரை. பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார்.. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பிரபுதேவா பேசுகையில், இந்த படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டி இருந்தது. இந்தப் படத்தின் நடன இயக்குநர் சதீஷ், இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவர் உதவியாளர்கள் என்னை விட நன்றாக ஆடினார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள். அதேபோல் படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார் என்று கூறினார். இந்த பொய்க்கால் குதிரை படம் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து