முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து

திங்கட்கிழமை, 25 ஜூலை 2022      உலகம்
Xi-Jinping 2022 07 01

Source: provided

பெய்ஜிங் : இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு நேற்று பதவியேற்றுக்கொண்டார். திரெளபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், "சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். ஆரோக்கியமான சீனா-இந்தியா உறவு இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்ப, அமைதிக்கு உகந்த வகையில் உள்ளது.

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஜனாதிபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து