முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு விருது வழங்கி கவுரவித்த போரிஸ் ஜான்சன்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      உலகம்
jelansky------------2022-07-28

Source: provided

லண்டன்:இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யா போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது. போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார். 

இந்த நிலையில் இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார். இது குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  

வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறி விட்டன என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து