முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணின் வீட்டில் இருந்து திருடு போன ரூ. 247 கோடி மதிப்பு நகைகள் துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      உலகம்
THEFT-------2022-07-28

Source: provided

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரூ. 247 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடியதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட நகைகள் குறித்த துப்பு கொடுப்போருக்கு ரூ.57 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது மகள் தமரா. இவர் கடந்த 2019-ல் தனது கணவர், மகளுடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். அதே நேரத்தில் லண்டன் வீட்டில் மிகப்பெரிய திருட்டு நடந்துள்ளது. வீட்டின் ஒவ்வொரு அறையையும் கொள்ளையர்கள் சூறையாடியதுடன், விலை உயர்ந்த நகைகள், கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.247 கோடி எனக் கூறப்படுகிறது.

திருட்டு நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த தமரா, தனது நகைகளை சட்டப்படி மீட்க நீண்ட நாட்கள் காத்திருந்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை எனக்கூறி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த துப்பு கொடுப்போருக்கு நகைகள் மீட்கப்பட்டால், மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ. 57 கோடியை சன்மானமாக வழங்க தயாராக உள்ளதாக தமாரா அறிவித்துள்ளார். இந்த மிகப்பெரிய திருட்டு சம்பவத்தில் இதுவரை ஒரே ஒரு ஜோடி தோடு மட்டுமே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து