முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றுவோம்: ஓ.பி.எஸ். அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தீரன் சின்னமலை பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில், அவரது நினைவு நாளான, ஆடி மாதம் 18-ம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க அம்மா உத்தரவிட்டு ஓடாநிலையில் மணிமண்டபத்தையும் திறந்து வைத்தார்.

தீரன் சின்னமலையைத் தூக்கிலிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுத்தது அவரது நினைவு நாளில் நினைவு கூர்ந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்து, அவருக்கு எனது மரியாதையினையும், வீர வணக்கத்தினையும் பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தீரன் சின்னமலையின் பெருமைமிக்க அடிச்சு வட்டில் நாமும் பயணித்து நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என அவரது நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம். தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து