முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 3 முறை எதிர்கொள்கிறது இந்தியா

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
cricket-2022-08-05

Source: provided

அபுதாபி: விரைவில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் தலா மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

போட்டி மாற்றம்...

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை என ஆறு அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. ஆறாவது அணிக்கான தகுதி சுற்றில் தேர்ச்சி பெறும் அணி இந்தத் தொடரில் விளையாடும். இந்த தொடர் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் நடைபெற உள்ளது.

முதல் 2 இடங்கள்...

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணியும் குரூப் ‘ஏ’ சுற்று போட்டியில் விளையாடுகின்றன. இதில் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி விளையாடுகின்றன. அது முடிந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் விளையாட வேண்டும்.

சூப்பர் 4 சுற்று...

நான்கு அணிகள் விளையாடும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் விளையாட வேண்டும்.

3 போட்டிகளில்...

அதே போல் இரு அணிகளும் குரூப் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும். வெறும் 15 நாட்கள் இடைவெளியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு அமைந்துள்ள காரணத்தால் இதனை இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்திய அணி...

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய அணி அறிவிக்கப்படும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து