முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியில் முடிந்த புதிய முயற்சி: விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது : இஸ்ரோ மீண்டு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Isro 2022-08-07

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்.எஸ்.எல்.வி -டி1 ராக்கெட் நேற்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக முதலில் அறியப்பட்டது. ஆனால் திடீரென செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. 2 செயற்கைகோள்களையும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. நீள் வட்டப்பாதையில் நிறுதப்பட்டதால் இதனை பயன்படுத்த முடியாது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது வரை அதிக எடை கொண்ட செயற்கைகோள்களே சுமந்து சென்ற நிலையில் தற்போது மிக குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பும் பணியை இஸ்ரோ துவக்கி இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மைதானத்தில் இருந்து விண்ணிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. இதுவரை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. இதில் பி.எஸ்.எல்.வி. 1,860 கிலோ , ஜி.எஸ்.எல்.வி. 4 ஆயிரம் கிலோ வரை எடையை சுமந்து செல்லும். எஸ்.எஸ்.எல்.வி. மிக குறைந்த 500 கிலோ வரையிலான எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும்.

இந்த எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் 145 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்.2 , இது பூமியை கண்காணிக்க உதவும் . 8 கிலோ கொண்ட ஆசாதிசேட் செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. ஆசாதிசேட் கல்விசார்ந்த ஒன்றாகும். இதனை 750 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் தயாரித்துள்ளனர். இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் இந்தியா அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், விண்ணுக்கு அனுப்பிய 2 செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 47 நிமிடங்கள் கடந்துவிட்ட போதிலும் தற்போது வரை சிக்னல் வரவில்லை என்றார். இதனால் செயற்கைகோள்களுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், செயற்கைகோள்கள் 356 கி.மீ., சுற்றுவட்டப்பாதைக்கு பதில், 356 கி.மீ., 76 கி.மீ., நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இனிமேல் அந்த செயற்கைகோள்களை பயன்படுத்த முடியாது. பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. சென்சார் செயலிழப்பை கண்டறிந்து, மீட்பு நடவடிக்கைக்கு செல்ல நடவடிக்கையின் போது பாதை மறியது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.வி.-டி2 செயற்கைக்கோளுடன் இஸ்ரோ மீண்டும் வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து