முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ்ட் 6 அவர்ஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Last-6-Hours-Review 2022-08

Source: provided

பரத் நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் இப்போது வெளியாகி உள்ள திரைப்படம் லாஸ்ட் 6 ஹவர்ஸ். இந்தப் படத்தில் பரத்துடன் அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, ஒரு ஊரின் மத்தியிலுள்ள பெரிய பங்களாவில் நான்கு கொள்ளையர்கள் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். இந்த நான்கு திருடர்களில் ஒருவர் ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறார். திட்டம் போட்டு திருடிய இவர்கள் அடுத்ததாக ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாக தெரிய வர அந்த பங்களாவில் கொள்ளையடிக்க கிளம்புகின்றனர்.பங்களாவுக்குள் சென்று பார்த்த போது அங்கு கட்டு மஸ்தான உடலமைப்போடு பரத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் பரத்துக்கு கண்பார்வை தெரியாது காதுகளை கண்களாக பயன்படுத்தி கொள்ளையர்களிடம் சண்டையிட இதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கொள்ளையன் கொல்லப்படுகிறான். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். நீண்ட இடைவெளிக்கு பிறகு பரத் அதிரடியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். கொள்ளையர்களாக நடித்துள்ள அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. படத்தின் பின்னணி இசை பலம் சேர்க்கிறது. அவருக்கு இந்த படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து