முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் லங்கையா என்ற புதிய வகை வைரஸ் பரவல்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
China-virus 2022-08-10

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு சீனாவில் உள்ள மக்களுக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை யடுத்து சோதனை நடத்திய போது இந்த வைரஸ் பற்றி டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லங்கையா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து