முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் சாதித்து விட்டேன்: செஸ் வீராங்கனை ஹரிகா நெகிழ்ச்சி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Harika 2022 08 10

Source: provided

மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளார். 

162 நாடுகள்...

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சார்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிர் பிரிவில் 162 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

18 வருடங்கள்...

இந்நிலையில் வெண்கலம் வென்றது பற்றி செஸ் வீராங்கனை ஹரிகா கூறியதாவது., 13 வயதில் இந்திய மகளிர் அணிக்காக அறிமுகமானதிலிருந்து 18 வருடங்களாகி விட்டன. இதுவரை 9 ஒலிம்பியாட்களில் விளையாடியுள்ளேன். இந்திய அணியினருடன் பதக்க மேடையில் நிற்க வேண்டும் என்பது கனவாக இருந்து. அது இந்தமுறை நிறைவேறியுள்ளது.

பதக்கம் பெற...

9 மாத கர்ப்பிணியாக இருந்து சாதித்ததால் இது உணர்வுபூர்வமாக உள்ளது. ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அப்போட்டியில் விளையாடலாம் என என் மருத்துவர் சொன்னதிலிருந்து ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறவேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டேன். இதைச் சாத்தியமாக்குவதற்காகவே என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். 

சாதித்துள்ளேன்... 

வளைகாப்பு நிகழ்ச்சி இல்லை, பார்ட்டிகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை... பதக்கம் வென்ற பிறகே இவை அனைத்தும் என முடிவெடுத்தேன். நான் நன்றாக விளையாட வேண்டும் என தினமும் உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்து, அதைச் சாதித்துள்ளேன். இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து