முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      உலகம்
England-heat-2022 08 11

இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குளிர்பிரதேச பகுதிகளான ஐரோப்பாவின் பல நாடுகளிலும் சமீப காலங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலைகடந்த ஜூலை மாதம் கடும் வெப்ப அலைகளை சந்தித்த இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும், புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிகமாக உயரலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் இங்கிலாந்தை சுற்றியுள்ள அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் இருக்கும். 1935-ம் ஆண்டுக்கு பின்னர், கடந்த ஜூலை மாதம் தான் இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஜூலையாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து