முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ வரலாற்று சாதனை

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Bravo 2022-08-12

டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ. ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவர்.

2006-ம் ஆண்டு முதல்.... 

38 வயதான அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணிகளில் அவர் விளையாடி உள்ளார். இத்தகைய சூழலில்தான் இந்த வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

545-வது போட்டியில்...

தனது 545-வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீகில் விளையாடி 522 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளனர்.

தி ஹண்ட்ரட் தொடர்... 

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ரிலீ ரோசோவ் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றினார் பிராவோ. அதுதான் அவரது 600-வது டி20 விக்கெட்.

வேறு எவரும் இல்லை...

டி20 கிரிக்கெட்டில் அவரை தவிர வேறு எந்தவொரு பவுலரும் 500 விக்கெட் என்ற மைல்கல்லை கூட இன்னும் தொடவில்லை. அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 466 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பவுலராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து