Idhayam Matrimony

சல்மான் ருஷ்டியை தொடர்ந்து ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கும் டுவிட்டரில் கொலை மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      உலகம்
JK-Rowling 2022-08-14

Source: provided

லண்டன் ; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.  உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

. இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஹாரி பாட்டர் கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன்.

அவர் நலமுடன் இருக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். ஜே.கே.ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்து பதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான் என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து