முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 252 கோடி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : 2021-22 அரவை ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 252 கோடி முன்பணம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை அனைத்து ஆலைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும் கரும்புக்கான கடன் வாங்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.

மேலும் ரூ. 252 கோடி இரண்டு மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் போதிய விலை இல்லாமலும் தரமான கரும்புகள் வழங்க முடியாமல் ஒன்றிய அரசு வழங்கக் கூடிய தொகையை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் ரூ. 252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது கரும்பு விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து