முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி. தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995-ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் ஏராளமான நேயர்களைப் பெற்றவர்.

இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சரோஜ் நாராயண சுவாமி, வயது முதுமை காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்று விட்டது சரோஜ் நாராயண்சுவாமியின் குரல்.  மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து