முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத்தரமிக்க சிறந்த படம் விஜய் ஆண்டனி பாராட்டு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Vijay-Antony 2022-08-15

Source: provided

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் பிக்சர்சுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கொலை.பாலாஜி கே.குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகாசிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப் படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப் பட்டது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விசயம். நான் உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்தப் படம் உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்தப் படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக, இந்தப் படத்தின் இசையமைப்பாளரின் பணி எனக்கு உலகத்தரமாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளர் இந்தப் படத்தின் கதையைப் புரிந்து, அதைத் தொகுத்துள்ளார். இந்தப் படத்தில் சிஜி கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியைச் செய்துள்ளார். அது பேசப்படும்.  ரித்திகா, மீனாட்சியுடன் பணிபுரிந்தது பெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும் நன்றி என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து