முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Marlon-Brando 2022-08-17

Source: provided

லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் தி காட்பாதர் (192) படத்துக்கு சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தை சேர்ந்த மார்லன் பிராண்டோவின் பெயர் விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில் பெதர் மேடைக்கு வந்தார். அவர் பிராண்டோவின் பிரதிநிதியாக விருதை பெற வந்திருக்கிறார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் விருதை பெற மறுத்த அவர், மைக் முன்பு சென்று மார்லன் பிராண்டோவின் கடிதத்தை வாசிக்க தொடங்கினார். 

திரைத்துறையில் அமெரிக்க பூர்விக குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதால் மார்லன் பிராண்டோ இந்த விருதை வாங்க மறுத்து விட்டார் என கூறி விட்டு சாஷீன் லிட்டில் பெதர் மேடையை விட்டு இறங்கினார். மார்லன் பிராண்டோவின் கடிதமும், சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கர் அரங்கை அதிரச் செய்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் சாஷீன் பல அவமதிப்புகளை எதிர்கொண்டார். திரைத்துறையில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

தற்போது சாஷீனுக்கு 75 வயதாகும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக சாஷீனுக்கு ஆஸ்கர் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் ரூபின் எழுதியுள்ள கடிதத்தில், திரைத்துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து