முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
William-Ruto 2022-08-17

கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49 சதவீத வாக்குகள் பெற்று வில்லியம் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவருமான ரெய்லா ஒடிங்கா 48.85 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.  இந்த நிலையில், தேர்தலில் முறைக்கேடு நடந்துள்ளதாக ரெய்லா ஒடிங்கா குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தச் சூழலில் வில்லியமின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நைரோபியில் போலீசாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனினும், வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபராக வில்லியம் ரூட்டோ பதவி ஏற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து