முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவான் - ஷூப்மான் கில் அபாரம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
dawan-2022-08-18

Source: provided

ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் -  ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தீபக் சஹார் - சிராஜ்...

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக விளையாடிய தீபக் சஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா பந்துவீச்சு...

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

189 ரன்களுக்கு...

அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், 10 ஆம் நிலை வீரராக களமிறங்கிய ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 

தலா 3 விக்கெட்கள்...

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

190 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நாளை (20-ம் தேதி) நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து