முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுகமாக 14 ஆண்டுகள் நிறைவு: நேசிப்பவர்கள் இருந்தாலும் தனிமையை உணர்ந்துள்ளேன் மனம் திறந்தார் விராட் கோலி

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
virat-2022-08-18

Source: provided

மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு... 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விராட் கோலி நேற்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது ஆட்ட திறன் மூலம் கிரிக்கெட் உலகையே கோலி ஆட்சி செய்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.

பலமாக இருக்க... 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினோடு ஒப்பீடு பேசப்பட்ட அவர் தற்போது ரன்கள் குவிக்க திணறி வருகிறார். இந்த நிலையில் தனது கடினமான சூழல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது., ஒரு விளையாட்டு வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வரும்போது மனரீதியாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இனி வரும் வீரர்கள், உடற்தகுதி நன்றாக வைத்துக்கொள்வது மற்றும் மீண்டு வருவதற்கு தொடர் முயற்சிகளை மட்டும் வைத்திருந்தால், சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார்.

தயாராகுங்கள்...

தனிமையை நான் அனுபவித்துள்ளேன். ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், நான் சில நேரங்களில் தனியாக இருப்பது போன்று உணர்ந்துள்ளேன். எனவே நமக்காக சற்று நேரத்தை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள். அப்படி முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால், பின்னர் பிரச்சினைகளை சரிசெய்வது என்பது கடினமாகிவிடும். கடுமையான சூழல்களை கையாண்டு பழக்கமாக்கி கொள்ளுங்கள் அப்போது உங்கள் பணி சுலபமாகும் என கோலி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து