முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானிகள் ஒருநாள் வேலைநிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      உலகம்
Germany 2022 09 02

Source: provided

பெர்லின் :  ஊதிய உயர்வு வழங்க கோரி ஜெர்மனியில் விமானிகள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்தது.  

விமானிகள் சங்கமான வெரினிகுங் காக்பிட் ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜெர்மன் விமான நிறுவனமான லுப்தான்சா நேற்று (வெள்ளிக்கிழமை) பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. 

5,000-க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விமானிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இதனால் நேற்று ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது.

இதன் காரணமாக நேற்று ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச் விமான நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என்று லுப்தான்சா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து