முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் பாரதிராஜா பொது பிரிவிற்கு மாற்றம் : ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார்

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      சினிமா
Bharathiraja 2022 08-26

Source: provided

சென்னை : இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா (81), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்ச்சத்து குறைவு மற்றும் நுரையீரல் சளி காரணமாக அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ வல்லுநர்களால் கண்காணிப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து