முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானுக்கு ஏவுகணைகள், ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      உலகம்
America 2022 09 03

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றார். இதையடுத்து தைவானை மிரட்டும் விதத்தில் அந்நாட்டு எல்லையில் தீவிர போர் பயிற்சிகளை சீனா மேற்கொண்டதால் பெரும் பதற்றம் உருவானது. இதனால் சீனாவை எதிர்க்கும் விதத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்க தைவான் திட்டமிட்டதால் பாதுகாப்புத்துறைக்கு சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருந்தது. 

இந்நிலையில் சீனாவின் எதிர்ப்புகளை மீறி அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க அரசு தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பதாக அறிவித்துள்ளது. போர் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய 60 ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள் எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் 100 ஏவுகணைகள் தைவானுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் ரேடார் கண்காணிப்பு விரிவாக்க அமைப்பையும் தைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து