முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 ஆண்டுகளுக்கு பிறகு 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் பொன்முடி

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
ponmudi--2022-09-01

Source: provided

சென்னை : கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:- 

அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது. ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் தற்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், பல்கலைக் கழகங்களுக்கு கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் 152 கோடி செலவை அரசே ஏற்கும் என அ.தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால் கல்லூரிகளுக்கு பணமும் ஒதுக்கவில்லை அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் 41 கல்லூரிகளும் அரசு உடமை ஆக்கப்பட்டது அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தக் கல்லூரிகளில் பணியாற்றிய கெஸ்ட் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1030 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பொறியியல் கலந்தாய்வு முதற்கட்டம் முடிந்து விட்டது.

இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது. தமிழகத்திற்கு கல்விக்கு என்று ஒரு கல்விக்குழுவை உருவாக்கி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் இருக்கும் அதற்கு எதிராக வேறுபட்ட கருத்து இல்லை என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து