முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 5-வது ஆண்டாக அறுவடை திருவிழா : விவசாயிகள் கொண்டாட்டம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      உலகம்
China 2022--09-24

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் 5-வது அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

சீனாவில் விவசாயிகளை உற்சாகபடுத்தும் வகையில் தொடர்ந்து 5-வது ஆண்டாக அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சீனாவின் தென்மேற்கு நகரமான சிங்டுவில் இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகத்தான அறுவடையை பறைசாற்றும் விதமாக சுமார் 20 நெல் வயல்களில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நடப்பாண்டில், சீனாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், திடீரென சில பகுதிகளில் ஏற்பட்ட கொரோனா தொற்று அதிகரிப்பு,தெற்கு பகுதியில் நிலவிய கடும் வறட்சி போன்ற காரணங்களால் குளிர்கால விதைப்பு பணிகள் தாமதமாகவே தொடங்கின. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் சீனா விவசாயத்தில் வேகமாக அதிகரித்து வரும் நவீன மயமாக்கல் உற்பத்தியை பெருக்கி வருகிறது. பல சவால்களுக்கு மத்தியிலும் நடப்பாண்டிலும் இலையுதிர் கால அறுவடை கூடியே உள்ளது.

சீனாவை பொறுத்தவரை 3 முக்கிய அறுவடை காலங்கள் உள்ளன. நெல் அறுவடை ஆண்டின் தொடக்கத்திலும், தானியங்கள் அறுவடை கோடைகாலத்திலும் மற்றும் இலையுதிர் காலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் இலையுதிர் கால அறுவடை தான் ஓராண்டுக்கு தேவையான தானியங்களில் 75 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் நடப்பாண்டு இலையுதிர் காலத்தில் 650 பில்லியன் கிலோ கிராம் தானியங்களை உற்பத்தி செய்வதை இலக்காக கொண்டு சீன அரசு நடைபோட்டு கொண்டு இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து