முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
Anbil-Makesh 2022-09-19

தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் பல்கலைக்கழக மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுபோல் தற்போது மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது குறித்துக் கேட்டதற்கு ஆக்கப்பூர்வமான கருத்து யார் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு யாராவது கருத்து கூறினால் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம். நாம் தொடர்ந்து மக்களுக்கு நல்லவித பணிகளைச் செய்வோம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும். தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்கப்படாது. தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு இறையாண்மைக்கு எதிராக செயல்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து