முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்குமார் இயக்கி நடிக்கும் சித்தரிக்கப்பட்டவை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Preethi 2022-09-24

Source: provided

ஒய் விசுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சித்தரிக்கப்பட்டவை என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கிறார் ராம்குமார். நாயகியாக பிரீத்தி நடிக்கிறார். விமலா, கே.பி.கணேஷ்குமார், ரவி, மணி, குமரேஷ்பாபு ஆகியோரும் படத்தில் நடத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு சுதன், இசை  எம்.எஸ்.தியாகு, பாடல்கள் ராம்குமார், அனீஷ், பி.ஆர்.ஓ வெங்கட். இப்படம் பற்றி ராம்குமார் கூறுகையில், அர்ஜூன் என்ற ஒரு கிராமத்து இளைஞன் கலைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆவலுடன் நகருக்கு வருகிறார். அங்கு இளம் தொழிலதிபரான சித்ரா தயாரிக்கும் விளம்பர படங்களில் நடிக்கிறார். இந்த வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு முறைகேடுகள் செய்கிறார்கள். அதே நேரம் சித்ராவையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள். இதனை அறிந்த அர்ஜூன் அதற்கு எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதே படத்தின் கதை என்றார். மேலும், மதுரை கொடைக்கானல், தேனி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று, தற்போது அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து