முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரு தசரா விழா: ஜனாதிபதி இன்று தொடங்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Dasara 2022-09-25

Source: provided

மைசூரு: சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை இன்று  (திங்கட்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள மைசூருவில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சரித்திர புகழ்பெற்ற தசரா விழா கர்நாடக மாநிலத்தின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. நவராத்திரியின் முதல் நாளன்று தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் இரவில் பூஜைகள் செய்யப்பட்டு விஜயதசமி நாளன்று ஜம்புசவாரி ஊர்வலத்தோடு முடிவடையும்.  இந்த ஆண்டு கொண்டாடப்படுவது 412-வது தசரா விழாவாகும்

இந்த ஆண்டு மைசூரு தசரா விழா இன்று (திங்கட்கிழமை) சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இன்று தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை 10 நாட்கள் தசரா விழா நடக்கிறது.  இதற்காக ரூ. 36 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. 

இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறையாகும். இன்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டி மலைக்கு செல்கிறார். பின்னர் காலை 9.45 முதல் காலை 10.05 மணிக்குள் ரசிகா லக்கனத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ள தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். 

முன்னதாக அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்ய உள்ளார். அவருடன் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரகலாத் ஜோஷி உள்பட 7 மத்திய அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் பகாதி கவுதம், மேயர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானம் மூலம் தார்வாருக்கு செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து