முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலி:தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
Banuprathapsingh 2022-09-25

Source: provided

ராமநாதபுரம்: தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கார் எரிப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த மத்திய சிறு குறு தொழில்துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க ஓ.பி.சி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் பா.ஜ.க பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருவது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடந்த என்.ஐ.ஏ சோதனை போல் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்தது. தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து